மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.


Popular posts
29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Image
*டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்.* *பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம்.* *கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி.* *34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.* *சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்.*
Image
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* **செய்திகள்:* *28:7:2020.* * *சென்னை* : ஈழுவ, தீயா சமுதாய மக்களின் நீண்டநாள் கேரிக்கையான oc other Cast (இதர வகுப்பினர்)என்று இருந்த நிலையை BC (பிற்படுத்தபட்ட வகுப்பினர்) யாக மாற்றி அமைத்து அவர்களின் உரிமையை நிலைநாட்டி மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் மாண்புமிகு துணை முதல்வர் EPS அவர்களும் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று 27:7:2020 அன்று அதற்க்கான சான்றிதழை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈமுவ, தீயா சேவா சமாஜ தலைவர் M.R.ரமேஷ்குமார் , ஜூவாலா .J.K,அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கோகுலம் குழுமத்தின் சேர்மேன் திரு.கோகுலம் கோபாலன்,குருதேவ பிரசரனசபா வின் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. அகிலேஷ், அவர்களும் கலந்துகொண்டனர். இது சம்பந்தமாக பல கட்ட போராட்டத்தினை பல வருடங்களாக மேற்க்கொண்டுவந்த சூழ்நிலையில் ஈழுவ,தீயா சமுதாய மக்களின் உரிமையை நிலைநாட்டி வரலாற்று சிறப்புமிக்க இந்த உரிமையை மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் முழுமுயற்ச்சி எடுத்து மண்புமிகு முதல்வரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று உரிமையை பெற்றுத்தந்துவிட்டதாக அச்சமுதாய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Image
டெல்லி: இன்று நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணமாகும். இத்துடன் 2022-ஆம் ஆண்டுதான் இந்தியாவில் தென்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிகிறது. சுமார் 6 மணி நேரம் நடக்கும் இந்த வானியல் அதிசயத்தை காண கோள் அரங்கங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்த கிரகணம் பகல் 12.10 மணிக்கு உச்சத்தை அடையும். இந்த ஆண்டின் முதல் கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டின் மிக நீண்ட பகல் பொழுது நாளில் நிகழும் சூரிய கிரகணம் - சில சுவாரஸ்யங்கள் இரண்டாவது கிரகணம் கடைசி கிரகணம் இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. புஜ்ஜில் உள்ள நேரு பிளேனடோரியத்தில் 9.58 மணிக்கு சூரிய கிரகணம் தெரியும் என்றும் திப்ருகாரில் 2.29 மணிக்கு இது முடிவடையும். அடுத்த 28 மாதங்களில் இந்த சூரிய கிரகணம் மட்டுமே இந்தியாவில் தென்படும் சூரிய கிரகணமாகும். இந்தியா நெருப்பு வளையங்கள் இத்துடன் இந்தியாவில் அக்டோபர் 25ஆம் தேதி 2022ஆம் ஆண்டு மட்டுமே அடுத்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காணமுடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது நிலவு 70 சதவீதம் மறைக்கப்படும். சூரிய கிரகணத்தை நேரடியாக காண்பது கண்களுக்கு பாதிப்பை கொடுக்கும். நெருப்பு வளையங்களை தொடர்ந்து பார்க்க முடியாது. கிரகணம் சூரியன் கிரகணம் உச்சமடையும் போது மட்டுமே இதை பார்க்க முடியும். கிரகணத்தின் உச்சத்தின் போது சூரியன் பிறை வடிவில் தெரியும். இது வருடாந்திர சூரிய கிரகணம் என்பதால் சூரியனை நிலவு நடு பக்கத்தில் மறைத்தபடியே இருக்கும் என்பதால் வானத்தில் ஒரு வளையம் போல் காட்சி தரும். ஏனெனில் நிலவு பூமியிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. எனவே அதனால் சூரியனை மொத்தமாக மறைக்கும் அளவுக்கு செய்ய முடியாது. சென்னை வேலூரில் தெரியும் சென்னையில் ஒரு பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். அதாவது காலை 10.22 மணி முதல் பிற்பகல் 1.41 மணி வரை காணமுடியும். கிரகணம் உச்சத்தை அடையும் போது சூரியனின் 34 சதவீதத்தை நிலவு மறைத்து கொள்ளும். தமிழகத்தில் வேலூர், கோவை ஆகிய பகுதிகளில் கிரகணத்தை காண முடியும்
Image