நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி.. திடீர் நெஞ்சுவலி.. உடம்பெல்லாம் காயம்.. எப்படி? தென்காசி: ஒரு விவசாயியை, நடுராத்திரி விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்களாம்.. திடீரென அவருக்கு நெஞ்சுவலி வந்து இறந்தும் விட்டாராம்.. ஆனால் உடம்பில் காயங்கள் இருக்கிறதாம்... எப்படி?? தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ளது வாகைக்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் அணைக்கரைமுத்து.. இவர் ஒரு விவசாயி.. 65 வயசாகிறது.. சொந்தமாக நிலம், தோட்டம் வைத்திருக்கிறார்.. அந்த தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டிருந்தார். ஆனால் காட்டு பன்றிகள் தோட்டத்துக்குள் நுழைந்து இவரது பயிர்களை நாசம் செய்து விடுவதால், நிலத்தை சுற்றி மின்வேலி போட்டிருந்தார்... இந்த மின்வேலியை அவர் வனத்துறையினர் அனுமதி இல்லாமல் போட்டுவிட்டதாக புகார் போயுள்ளது. மேலும் இலவச மின்சாரத்தை தோட்டத்துக்கு பயன்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் விசாரிக்க வனத்துறையினர் வந்துள்ளனர். பிறகு, இரவு 11.மணி அளவில் அணைக்கரைமுத்து வீட்டுக்கு போய், அவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு, கடையத்தில் உள்ள வனத்துறை ஆபீசுக்கு சென்றுள்ளனர். அங்குதான் நள்ளிரவில் விசாரணை நடந்துள்ளது.. ஆனால் அவர் இறந்துவிட்டார்.. அணைக்கரைமுத்து எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. நெஞ்சுவலி என்று சொன்னாராம்.. அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்று உறவினர்கள் சொல்கிறார்கள்.. வனத்துறையினர் தான் அடித்து கொன்றுவிட்டதாக சொல்லி மறியலும் செய்தனர். இந்த மறியல் விஷயத்தை கேள்விப்பட்டு, எம்எல்ஏ பூங்கோதை அங்கே வந்துவிட்டார்.. உறவினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.. உடனடியாக அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.. வனத்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்பளம் வாங்கலையோ அப்பளம்..கொரோனாவை ஒழிக்குமாம் பாபிஜி அப்பளம்- மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்... உயிரிழந்த அணைக்கரைமுத்து உடலில் இருந்த காயங்களையும் அவர் பார்வையிட்டார்... இப்போது அணைக்கரைமுத்து உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பப்பட்டுள்ளது.. அந்த ரிசல்ட் வந்தால்தான் அடுத்து என்ன நடவடிக்கை என்பது தெரியவரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான விசாரணைகள் நடுராத்திரிகளிலேயே ஏன் நடக்கின்றன? ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு போகிறவர்களுக்கு மட்டும் நெஞ்சுவலி எப்படி திடீரென வருகிறது என்ற மாய, மந்திரம் மட்டும் நமக்கு புரியவேயில்லை!


Popular posts
29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Image
தமிழ் மாநில கம்யூனிஸ்டு கட்சியின் துவக்கவிழா, கொடி, சட்டதிட்ட அறிமுக விழா, மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று 30: 8:2020 அன்று அக்கட்சியின் நிருவன தலைவர் திரு.அப்துல் ரகுமான் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில பொது.செயலாளர் திரு :மதுசூதனன் தலைமையில் நீலகிரி மாவட்டம் சேரங்கோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக மத ஒற்றுமை, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்றவை குறித்து பேசப்பட்டது இதில் இந்து ,முஸ்லிம், கிருஸ்து ஆகிய மதங்களிலிருந்து மூன்று மதபோதகர்கள் இந்த விழாவை தொடங்கி முடிந்துவைத்தனர்.
Image
மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Image
*மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை* *இதழ்)* *செய்திகள்:* *31:7:2020:* *சென்னை :* *நீலகிரி மாவட்டம்* *கூடலூர் , பந்தலூர்* *பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் போதிய* *அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகளை* *கோவை அல்லது கேரள மாநிலத்திற்க்கு* *கொண்டு செல்லும்போதே உயிரிழப்புகள் ஏற்ப்ட்டு விடுகிறது* . *எனவே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட* *கழகத்துக்கு சொந்தமான எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள Garden Hospital கார்டன் மருத்துவமனையை (ஏலியாஸ் கடை) பொதுமக்களின் பயண்பாட்டுக்கு சிறு மருத்துவ கல்லூரி யாக பெற்றுத்தர மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்)* *குழுமம்* *முழு* *முயற்ச்சி மேற்க்கொண்டு அ.இ.அதிமுக.நெலாக்கோட்டை முன்நாள் ஊராட்ச்சி மன்ற தலைவர் திருமதி. S. பிரேமலதா மற்றும் குரு தர்மபிசரன சபாவின் நீலகிரி மாவட செயலாளர் அகிலேஷ் ஆகியோரின் முயற்ச்சியால் பொதுமக்களிடம் பெருமளவில் கையொப்பம் பெற்றுக்கொண்டு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் இது சம்பந்தமான ஆவணங்களை 27:7:2020 அன்று சமர்பித்தனர். இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்து ஆவணங்களை ஆய்வு செய்து மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் வாயிலாக உடனடியாக மக்களின் துயர் நீக்குவதாக* *தெரிவித்துள்ளார்.* *இதற்க்கான ஆவணங்களையும் அஇஅதிமுக கடந்த தேர்தல் திட்ட மலரையும் மனித ஊரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.R.அகிலேஷ் அவர்கள் மாண்புமிகு உள்ளாட்ச்சி துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களிடம் சமர்ப்பித்தார்.*
Image